எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
சந்தித்த நேரம் முதல் பிரியவில்லை, நேற்றுவரை!
காதலை விட புனிதமானது நட்பு,
நட்பை விட புனிதமானது அன்னையின் கருவறை!
உருவும் கருவும் வேறாக இருந்த போதிலும்,
உயிரும் நினைப்பும் இன்றும் ஒன்றுதான்!
காலத்தை வென்ற நட்பு வரலாற்றில் உண்டு,
வரலாற்றை வென்ற நட்பு நமதாகுமா..?!
பள்ளி பருவத்தில் பார்வையாலே நட்பு பிறந்தது,
பேசினோம், பழகினோம், பகைமையும் பிறந்தது!
ஒரு சில நாட்கள் மௌனம், ஓராயிரம் வருடமாய் தெரிந்தது,
சிந்தித்தோம், சந்தித்தோம்! நட்பு புதிய பரிமாணம் எடுத்தது!
படிப்பில் போட்டியிட்டோம், ஒருவர் ஒருவரை மிஞ்சினோம்,
கண்களில் பொறாமை தெரிந்தது, மனதில் பெருமையே இருந்தது!
கல்லூரி பருவத்தில் காதல் வரும் (நட்பை மறந்தவர்களுக்கு),
எங்கள் நட்பிற்கே நேரம் இல்லை, இதயத்தில் காதலுக்கு இடம் இல்லை!
பல்வேறு கல்லூரிகளில் படித்தோம்,
பலவாறு கருத்துக்களை குறுஞ்செய்திகளாக பரிமாறினோம்!
கல்லூரி அனுபவங்களை அசை போட்டோம்,
ஆசைப்பட்ட படங்களை அன்றாடம் பார்த்தோம்!
கல்லூரி வாழ்கை கண்ணிமைக்கும் நேரத்தில் கழிந்தது,
பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படை எடுத்தோம்,வேலையும் கிடைத்தது!
மென்பொருட்களோடு(சாப்ட்வேர்) விளையாடினாய் நீ,
வன்பொருட்களோடு(ஹார்ட்வேர்) விளையாடினேன் நான்!மீண்டும் நம்முள் தற்காலிக பிரிவு!
வேலை பளு, நட்பின் வலுவை சோதித்தது,
வெளிநாடு சென்றாய் நீ., உள்நாட்டில் உழன்றேன் நான்,
தூரமும், வேலையும் வெல்ல முடியவில்லை நட்பை!
காதல் பிறந்தது உனக்கு,
கவலை பிறந்தது எனக்கு!
"உன் இதயத்தில் நட்பின் இடத்தை காதல் வென்று விடுமோ...?"
உனக்கு பிடித்தவளை 'அறிமுகம்' செய்தாய்,
நம் குடும்பத்திற்கான 'திருமுகம்' என்றேன்!
உன் குடும்பமும் உண்மை அறிந்து மகிழ்ந்தது!
மனம் முடித்தாய்!
பின் ஒருநாள், "வெளிநாட்டு குடிமகன் ஆவேன்" என்றாய்!
என் மனம் ஒடித்தாய்!
அந்நொடி வலித்தது என் நெஞ்சம்!
ஏன் பிறந்தோம்..? பழகினோம்...? பிரிந்தோம்...? .!
கண்கள் இமை என்னும் அணையை உடைத்தது,
கண்ணீர் வெள்ளம் கரை புரண்டோடியது,
காட்டிக்கொள்ளவில்லை உன்னிடத்தில்!உன் வருகை எதிர்பார்க்கிறேன்,
நட்பிற்கு என்றும் பிரிவில்லை என்ற ஆதங்கத்தோடு!
- உங்களில் ஒருவன்,
மு.சா
te english lines over te picture was very touchy :(
ReplyDelete