Friday, July 9, 2010

முதல் காதலும் தவிப்பும்...! (அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினான் - காதல் பிறந்தது, இக்கவிதை ஜனித்தது...!)




அடி பெண்ணே,
உன்னை அருகில் பார்த்த போது, என் உள்ளம் பதறியதே!
நீ தொலைவில் தொலைந்தவுடன், என் நெஞ்சம் கதறியதே! 
கண்ணே என் கண்ணே, உன்னை நான் பிரிவேனோ...?
உன்னை நான் பிரிந்தால், என்னை நான் இழப்பேனே...!

என்னுள் காதல் தோன்றியது, உன் ஒரே பார்வையில்!
கண் கூட வேர்த்து போனது, உன் வெப்ப பார்வையில்! 
ஏன் என்னை நோக்கினாய்...?
குறி வைத்து தாக்கினாய்...?

உன் கூர் விழி கிழித்தும், வரவில்லை குருதி, 
மாறாக ஏன் நெஞ்சில் ஒலித்தது சுருதி...?
ஓ! இதுதானோ காதலின் சிம்பொனி...?

காலையில் எழுந்தால் உன் ஞாபகம்,
வேலையில் இருந்தால் உன் நினைவுகள்,
மஞ்சள் வெயில் மாலையில் உன் எண்ணங்கள்,
நடு இரவின்  மழைச்சாரலில் உன் முகம்!

ஏன் என்னை உயிரோடு கொல்கிறாய்...
ஏன் என்னை நெருப்பாக சுடுகிறாய்...
நான் என்ன உருவம் இருந்தும் பொம்மையா...?

      இன்றே சொல்லிவிடு, இல்லை நின்றே கொன்று விடு!          







 - உங்களில் ஒருவன்,

       மு.சா
 


  

No comments:

Post a Comment

Those who comment please leave your mail id and name, to post u my future articles.