ஹீரோயின்: பூனம் பாஜ்வா
காமெடி: வடிவேல்
வில்லன் : ஜே.டி.சக்கரவர்த்தி
இசை: டி.இமான்
இயக்கம்: திரைவண்ணன்
தயாரிப்பு: ஆர். பி. சௌத்ரி "சூப்பர் குட் பில்ம்ஸ்
REVIEW BY : AUTHOR
"தமிழ் படத்துக்கு" (RECENT COMEDY BLOCK BUSTER) அப்புறம், தமிழ் படங்களை புது TREND'LA எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க (Kudos). கச்சேரி ஆரம்பம் படம் அந்த லிஸ்ட்ல வருது. சில காலமாக தமிழ் சினிமா வெட்டு, குத்து, ரௌடிசம் சுத்தியே எடுக்கப்பட்டது. நம் மக்கள் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். ஆனால், அதற்கு சரியான தீனி கிடைக்கவில்லை. பெண்களும் சீரியல் பார்த்து பொழுதை கழிக்கிறார்கள். குடும்பத்துடன் படம் பார்க்க ஒரு படம் வராதா? என்ற ஏக்கத்துக்கு விடை கிடைத்து விட்டது.
கச்சேரி ஆரம்பம் படம், ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். ஜீவா படத்துக்கு படம் கிடைக்கும் அனுபவ பாடங்களை சரியான முறையில் பயன்படுத்தி இருக்கிறார் (KEEP IT UP JEEVA!). வழக்கம்போல் இதிலும் ஒரு ஜாலியான இளைஞராக படு CASUALஆக பட்டய கிளப்பி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை, கச்சேரிதான்!
பிளாஷ் பாக்'ல தொடங்குது படம். ராமநாதபுரத்துல, வீட்டுல சொல் படி கேக்காம, தன் பணக்கார அப்பாவுக்கு தொல்லை கொடுக்றாரு ஜீவா. இஷ்டத்துக்கு பணத்த எறச்சு ஊருக்கு உதவுறாரு (இதுல ஜீவா கேரக்டர் பேரு "பாரி", SO, ஊருக்குள்ள வள்ளலா வலம் வருராறு! ). இத அப்பா ஒரு நாள் ரொம்ப சீரியஸ்'ஆஹ கேக்க, பய புள்ளைக்கு ரோஷம் பொத்து கிட்டு வருது. சொல்லாம கொல்லாம லெட்டர் எழுதி வெச்சுட்டு, கம்பி நீட்டுராறு. இங்க ஆரம்பிக்குது காமெடி கச்சேரி!
ட்ரைன் ஏறி, நேரா...(வேற எங்க..?) சென்னைக்குதான் போறாரு. அங்க நம்ம வைகை புயல் வடிவேல் பர்மா பஜார் கடை அதிபர். அவர்கிட்ட போயி வேலைல சேருராறு. ரொம்ப நாளைக்கு அப்றமா, இந்த படத்துல வடிவேலு காமெடில பின்னி பெடல் எடுத்திருக்காரு. அவரு ஜீவா கிட்ட சிக்கி பாடு படும் போது எல்லாம், நரசிம்மராவ் கூட சிரிச்சிருவாறு. இப்படி காமெடியா போற படத்துல, ஹீரோயின் பூனம் பாஜ்வா என்ட்ரி ஆகுறாங்க. அப்பரம் என்ன ஜீவா, அவங்கள பார்த்த உடனே காதலிக்கலாம்னு முடிவு பண்றாரு. இங்க ட்விஸ்ட் ஆரம்பிக்குது.
அதே பொண்ண, சென்னை'ல பெரிய ரவுடி & தொழில் அதிபரா இருக்க ஜே.டி.சக்கரவர்த்தி (சர்வம் படத்துல வில்லன்), விரும்புராறு. ஊருக்குள, யாரு அந்த பொண்ண பாத்தாலும், பேசுனாலும் ரௌடிகள் பந்தாடுறாங்க! இத கேள்விப்பட்ட நம்ம ஜீவா, ஒரு சின்ன பிளான் போடுறாரு. அது என்னனா, பூனம் கிட்ட ஜே.டி.'கு சிபாரிசா பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிற மாதிரி நடிக்கிறது. அதுனால வில்லன் கிட்டேயே தம்பி மாதிரி ADOPT ஆகுறாரு.
ஜே.டி. தன்ன முழுசா நம்புற மாதிரி பல காரியங்கள செய்யிராரு "துருதுரு" ஜீவா! அதே நேரத்துல வில்லனுக்கு டிமிக்கி குடுத்துட்டு, பூனம் பஜ்வா கூட டூயட்டும் பாடுறாரு! கடைசி வரைக்கும் வில்லனுக்கு சந்தேகம் வராம ரொம்ப சாமர்த்தியமா(?), காய் நகர்த்துராரு. இந்த போராட்டத்துக்கு நடுவுல வடிவேல் மாட்டி கொண்டு ரொம்ப அவஸ்த பட்டு, நம்மள சிரிக்க வெச்சே ரணகளம் ஆக்குறாரு. இன்னொரு பக்கம் "காதல்" தண்டபாணி, ("காதல்" படத்துல வில்லன் & சந்தியா அப்பா) ஹீரோயின LOVE'S பண்றேன்னு கெட்ட ரவுசு பண்ணி, நம்மள சிரிப்பு சுனாமி'ல திக்கு முக்கு ஆட வெக்கிறாரு.
இதுக்கு இடைல, நாலு FIGHTU, நாலு PAATU சேர்த்து, கரம் மசாலா படமா கொடுத்திருக்காரு புதிய இயக்குனர் திரைவண்ணன்(CONGRATZ! Mr.TV). இமான் இசையில் TAJMAHAL BG ல "கடவுளே" பாடல் கண்களுக்கும் காதுகளுக்கும் TREAT, மத்த பாடல்கள் பரவா இல்லை. கடைசில ஜீவா மாட்டி கிட்டாரா? வில்லன் லவ் SUCCESS ஆச்சா? இல்ல, ஜீவா ஜெயிக்கிறாரா? இந்த கேள்விக்கு எல்லாம் பதில் தெரியணும்னா...
உங்க குடும்பதோடையோ, லவ்வரோடயோ, நண்பர்களோடயோ... யாருமே கம்பெனி குடுக்கலைனா, தனியாவோ போய் பாருங்க... வயிறு குலுங்க சிரிங்க... ENJOY பண்ணுங்க!
சூப்பரப்பு ஜீவா, வடிவேலு & NON -STOP காமெடி.
சொதப்பலப்பு USUAL வில்லன், USUAL முக்கோண காதல் கதை & BG மியூசிக்.
சுருக்கமா சொன்னா: "தயவு செஞ்சு ULCER PATIENT, படம் பாக்காதிங்க வயிறு ரொம்ப புண் ஆயிடும்!"
MY RATING 70%
DISCLAIMER: Rating & Review is based on my view over the film & it shouldn't be considered as mass opinion - SADIQUE (Blog Owner)
RATINGS & THEIR CATEGORY :
BELOW 50 % = WASTE
50% - 60% = OK
60% - 70% = GOOD
70% - 80% = EXCELLENT
80% - 90% = MUST WATCH
90% - 100% = WATCH BEFORE YOU DIE! TRAILER
No comments:
Post a Comment
Those who comment please leave your mail id and name, to post u my future articles.