Friday, December 10, 2010

"மழை" - கவிதை














வானிலை அறிக்கை:
"இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்!"
அப்படியானால், அடை மழை அசராமல் பொழியும் என்பதே நிதர்சனம்!
"தரிசனம் காட்டும் மழை" - என் மனதில் பட்டது!

சற்று நேரத்தில், அறிவிப்பிலாமல் அடித்து ஊத்தியது!
சிலர் சிலாகித்தார்கள், "செம மழை!"
சிலர் புலம்பினார்கள், "இந்த நாசமா போன மழையால என் பயிரெல்லாம் மயிர் மாதிரி போச்சே", வயிர் எரிய!

அசுர வேக வாகனங்களுக்கு மழையும் வேகத்தடையானது ,
சாலை ஓர ஈர மணலில் ஊர்ந்து சென்ற நத்தை, மிஞ்சியது அவற்றை!

குழந்தைகள்,
குதூகலமாய் குளத்தில் குதித்து குளித்து கும்மாளமிட்டார்கள்!

வாலிபர்கள்,
வாட்ட சாட்டமான வாகனங்களில், சாலையை வட்டம் அடித்தார்கள்,
சாகசம் பல புரிந்தார்கள்!
அவ்விடம் கூடாரம் இல்லாத சர்க்கஸ் ஆனது!

வயது முதிந்தவர்கள்,
 ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து,
வருண பகவானை வணங்கி வழிபட்டார்கள், நாவார நன்றி நவின்றார்கள்!

அடடா! "மழைக்கு இத்துணை முகங்களா...?", என்று மலைத்தேன்!
என் கரங்களில் மலர்ந்த மான் மார்க் குடையை மடக்கி,
அவர்களோடு நானும் நனைந்தேன், இயற்கையோடு இணை சேர்ந்தேன்!  

- உங்களில் ஒருவன்,
           மு.சா.  

          
                

2 comments:

  1. KIND REQUEST:

    Those who comment please leave your mail id and name, to send u my future articles.

    With Ton's of Thanks,
    -Sadique (Blog Owner)

    ReplyDelete
  2. nic one awesome wonderful

    name Abhi
    email abhirami1998@gmail.com

    ReplyDelete

Those who comment please leave your mail id and name, to post u my future articles.