Monday, April 5, 2010

வின்னைத்தாண்டி வருவாயா...? / VINNAI THAANDI VARUVAAYA...? - MOVIE REVIEW

 
 ஹீரோ : சிம்பு
ஹீரோயின்: த்ரிஷா
காமெடி: ???
வில்லன்/வில்லி : த்ரிஷா & her family . 
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்  
இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்  
தயாரிப்பு: Escape  Artists Motion Pictures And R.S. Infotainment.
REVIEW BY : AUTHOR



  "வீட்டை தாண்டி வருவாயா ?", இந்த TITLE படத்துக்கு செம பொருத்தமா  இருக்கும்.    
சிம்புவோட(கார்த்திக்), வீட்டு owner  பொண்ணு த்ரிஷா (ஜெஸ்ஸி). கிறிஸ்தவ மலையாளி குடும்பம். முதல் தடவ த்ரிஷாவ பார்த்த உடனே  காதலில் விழுறார் சிம்பு (இத எப்பதான் மாத்துவாங்களோ... ?). த்ரிஷாவுக்கு 23  வயசு.  சிம்புக்கு 22 . இருந்தாலும்  பரவாயில்லைன்னு  வெரட்டி வெரட்டி VARIETY VARIETY'AA  லவ் பன்றாரு.

       சிம்பு, MECHANICAL இன்ஜினியரிங் பட்டதாரி. அவரது கனவு "பெரிய இயக்குனர்" ஆகனும்ங்றது. தனக்கு தெரிந்த ஒரு நண்பர் CINEMATOGRAPHER வேலை பாக்குறாரு. அவர் மூலமா கே.எஸ். ரவிக்குமார் படத்துல ASSISTANT CG வேலை கிடைக்குது. ஒரே டைம்'ல வேலையும் பாக்குறார், காதலும் செய்றார். ஆனா, த்ரிஷா சிம்புவோட FRIEND'AA இருக்க விரும்புறாங்க. ஆனா சிம்புக்கு காதல் மட்டும்தான் மனசுல நிக்குது. அத ஒரு கட்டத்துல த்ரிஷா ACCEPT பண்றாங்க. அவங்க அண்ணனுக்கு இது தெரிந்து, சிம்புவோட மோதி தோத்து போறாரு (ஏன்னா சிம்பு ஒரு BOXING சாம்பியன்.. ?? நல்லா பூ சுத்துராங்கபா! )    .

     த்ரிஷா கேரளாவுக்கு(ஆலப்புழா) போறாங்க, அங்க அவங்களுக்கு ENGAGEMENT வேற ஒரு பையனோட FIX ஆகுது. சிம்புவும் பின்னாடியே போறார், தன் நண்பரையும் (CINEMATOGRAPHER) கூட்டிகொண்டு. சர்ச்'ல த்ரிஷா சம்மதம் சொல்ல மறுக்கிறார். அங்கு சிம்புவும் தன் நண்பருடன் ஒரு ஓரத்துல ஒக்காந்து வேடிக்கை பாக்குறார். கல்யாணம் நிண்டு போகுது.

    இதுக்கு சிம்புதான் காரணம் என்று நினைத்து அவரை பிடித்து அந்த ஊரு  ஜெயிலில் போடுறாங்க, த்ரிஷா குடும்ப ஆட்கள். அப்பரம் அவரை மிரட்டி இனிமே ஜெஸ்ஸி கிட்ட பேசவோ, பழகவோ கூடாதுன்னு சொல்லி ரிலீஸ் பண்றாங்க. அன்னைக்கே, தெரியாம போயி திரும்பவும்  த்ரிஷாவ பாக்குறாரு.  த்ரிஷா சிம்புவ DIRECTOR ஆகணும் நீ! அதுனால எங்கிட்ட பேசாத, பழகாத... எனக்கு சினிமாவே  பிடிக்காது அப்டின்னு ஏதேதோ சொல்லி  அனுப்புறாங்க.  அப்றம்  ட்ரைன்ல ரெண்டு பேரும் சென்னைக்கு திரும்பி  வரப்ப, லவ் பண்றாங்க, பிரியிறாங்க. த்ரிஷா கூட பேசாம அவரால WORK'ல CONCENTRATE பன்ன முடியல. திரும்ப பேசுறாரு . போய் பாக்குறாரு. அப்றம் த்ரிஷா இவர பாக்க மறுக்குறாங்க. பிடிவாதமா லவ் பண்றாரு. அப்றம் த்ரிஷாவும் லவ் பண்றாங்க. அப்பரம் பிரியுறாங்க....? (ஏன் இப்படி) ஒரு கட்டத்துல 3 YEARS பாக்காம இருக்குறாங்க ரெண்டு பேரும். சிம்பு ஒரு படம் டைரக்ட் பண்றாரு. அவரு LIFE 'ல  நடந்த சம்பவத்தையே படம் ஆக்குறாரு. அது செம ஹிட் ஆகுது (எப்டி ஹிட் ஆச்சு பாஸ்...???).  ஒரே படத்துல பெரிய டைரக்டர் ஆகுறாரு!!

     ஒரு நாள் த்ரிஷாவ FORIEGN SHOOTING'ல எதிர் பாராம பாக்குறாரு. த்ரிஷா வழிய வந்து இவரு கிட்ட பேசுறாங்க, அப்றம் இவரோட படத்தை ரெண்டு பேரும் ஒரே THEATRE'ல ஒண்ணா உக்காந்து பாக்குறாங்க. படத்தோட பேரு "ஜெஸ்ஸி". அத பார்த்து த்ரிஷா சிம்புவ பாராட்டுறாங்க. வெளில வரும்போது, த்ரிஷா அவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லி, அதுதான் என்  HUSBAND'NU ஒருத்தர கை காட்றாங்க. சிம்பு நொந்து போறார். படம் முடியுது! நாமளும் நொந்து போறோம்! 

     இப்படி ஒரு கொழப்பம் புடிச்ச கதைய, (MAY BE GAUTHAM'S OWN STORY) ரொம்ப தெளிவா சொல்லி நம்மள கொழப்புறாரு டைரக்டர் கௌதம். வாழ்க்கைல இவ்வளவு கொழப்பம் நெறஞ்ச ஒரு படிச்ச பொண்ண இந்த படத்துல மட்டும்தான் பார்க்க முடியும், த்ரிஷா ரூபத்துல!  நல்லவேளை,  சிம்பு "AMBITION " தான் முக்கியம் அப்டின்னு DECIDE பண்ணினது, மிக அருமை. இல்லாட்டி காதல் பரத் மாதிரி லூஸ் ஆயிருப்பாறு. 
   
        படத்துல திரும்ப திரும்ப ஒரே காட்சியை காட்டி போர் அடிக்குறாங்க. ஒரே வசனத்தை நெறையா தடவ பேசுறாங்க. ஒரே ஆறுதல் சிம்பு ரொம்ப பெனாத்தாம, CUTE & SIMPLE'ஆ நடிச்சு அசத்திருக்காறு. கௌதம் படத்துல SONG'S & LOCATION'S எப்பவுமே பிரமாதமா இருக்கும். இந்த படத்துல ONE STEP AHEAD. A.R.RAHMAN ONCE AGAIN உலக தரம் வாய்ந்த இசையை அமைத்திருக்கிறார்.

    கௌதம் சார், தயவு செஞ்சு இனிமே மணிரத்னம் மாதிரி படம் எடுக்க ட்ரை பண்ணாதிங்க. உங்களுக்குனு ஒரு STYLE இருக்கு, அதுலயே படம் பண்ணுங்க. அதைத்தான் மக்கள் விரும்புறாங்க. இதை அல்ல!
      
சூப்பரப்பு சிம்புவோட அலட்டல் இல்லாத நடிப்பு, இசை, ஒளிப்பதிவு .

சொதப்பலப்பு BORE LOVE STORY, AGED FIREND OF SIMBU (DOING மொக்க COMEDY- முடியலடா சாமி! ), DEAD SLOW SCREEN PLAY.

சுருக்கமா சொன்னா: "LOVERS SPECIAL! மற்றவர்கள் நேரம் இருந்தா பாக்கலாம்!"

TCR RATING IS  58%

DISCLAIMER: TCR RATINGS & REVIEWS ARE BASED ON THE VIEW OF AN INDIVIDUAL & IT SHOULD NOT BE CONSIDERED AS MASS OPINION - AUTHOR.

RATINGS & THEIR CATEGORY :

BELOW 50 %    = WASTE
50% - 60%       = OK
60% - 70%       = GOOD
70% - 80%       = EXCELLENT
80% - 90%       = MUST WATCH
90% - 100%     = WATCH BEFORE YOU DIE! 
 

1 comment:

Those who comment please leave your mail id and name, to post u my future articles.