காதல்...,
வெடித்து குமுறும் எரிமலை குழம்பை கூட,
குளு குளு பழரசமாக்கி, பருக கொடுக்கும்!
காதல்...,
நூறடி உயர பெரும் சுனாமியைக்கூட, வெறும் ஆறடி உயர அலையாய்,
உரு மாற்றி ரசிக்கும்!
இரத்தம் கூட உறைந்து போகும் *அண்டார்டிகாவில்...
காதலியின், சத்தம் இல்லா ஒரு முத்தம் போதும்,,,
பித்தம் தலைக்கேறும்! குருதி சூடேறும்!
ஏப்ரல் மாத இறுதியில், அறுதி இன்றி கொளுத்தும் அக்னி வெயிலில்,
உச்சி மண்டை கூட, உறுதி இழந்து விடும்!
அதன் தாக்கத்தில் இருந்து தப்பி பிழைக்க, அவளின்
'கடைக்கண்' பார்வை ஒன்றே போதும், 'கொடைக்கானல்' எதற்கு...?
ரோஜா, மல்லிகை போல 'ஆயிரம்' வகை மலர்கள் ஒன்று சேர்ந்தாலும், இணையாகாது
அவள் கூந்தலின் கிறங்கடிக்கும் நறுமணத்திற்கு...!
(WARNING: REST OF THE POEM, NOT FOR VERY SENSITIVE READERS...!
எச்சரிக்கை: இக்க(வி)தையின் தொடர்ச்சி இளகிய மனமுடையவர்களுக்கு அல்ல...! )
தொடர்ச்சி ...
------------------
ஒரு நாள்...!
------------------
அவளுக்கு பிறந்த நாள்..! சென்னையில் புகழ் பெற்ற வணிக வளாகம்...!
கண் இமைக்கும் நேரத்தில், ஒரு பெரும் தீ விபத்து...!
பச்சிளம் குழந்தையை சூழ்ந்தது நெருப்பு பிரளயம்!
உயிருக்கு போராடியது அந்த பிஞ்சு!
தாயின் கதறலில் வலித்தது நெஞ்சு!
குழந்தைகள் என்றால் உயிர் அவளுக்கு,
அவ்வுயிரை காப்பாற்ற துணிந்தாள்...
ஆகாயம் கருக்க, மின்னல் தெறிக்க, இடி முழங்க, சமுத்திரங்கள் ஆர்ப்பரிக்க,
*ஃபார்முலா-1 வாகனத்தின் வேகத்தில் புயல் காற்று, சூறாவளியாய் சுழன்றடிக்க,
பேய்-மாரி (பெரும் மழை) பொழிந்தது!
அவள் எரிந்த / எறிந்த அந்த கனம்...!
அவனுக்குள் நடந்தன இவ்வியற்கை தாண்டவங்கள்!
ஆம், அக்குழந்தையை காப்பாற்றி லாவகமாக அவனிடம் எறிந்தாள்!
அவளோ, நெருப்பின் உக்கிர ஜுவாலைக்குள் சிறைப்பட்டாள்! எரிந்தாள்!
வேதனையில் துடித்த அவளது அலறல் சத்தம்,
உயிரோடு மென்று துப்பியது! 'தூ' வென! அவன் முகத்தில்.
அந்த நொடி, செயல் இழந்து போனான்!
மூளை வேலை நிறுத்தம் செய்தது,
கண்கள் மங்கியது, மயங்கி விழுந்தான்!
எங்கும் மரண ஓலம்! எங்கும் புகையின் ஜாலம்!
புத்தி பேதலித்த பித்தனைப்போல், நெஞ்சம் பதை பதைக்க,
அங்கும் இங்கும் சிறு பிள்ளையைப்போல் தவழ்ந்தான், தத்தளித்தான்...!
நெருப்பிற்கு இரையாகி, சாம்பலாய் போன அவ்வலாகத்தின் ஒரு பகுதி முழுதும்
ஆறாம் அறிவு மங்கியவனாய், தேடினான், துழாவினான்...,
எட்டவும் இல்லை! அவன் கையில், அவள் கிட்டவும் இல்லை!
நெருப்பு கங்குகளின் மத்தியில் ஜொலித்தது ஒரு ஒளி !
பிறந்த நாள் பரிசாக அவளுக்கு அணிவித்த வைர மோதிரம்!
மரணத்தை வென்ற மழலைக்கு அதை பரிசளித்தான்! பரிதவித்தான்!
(சுய) நினைவை இழந்தது, நினைவில்லை அவனுக்கு!
அவன் எண்ணத்தில் ஏதோ தோன்றியது,
*" வெப்பத்தை தாங்கும் சக்தியை... வைரத்திற்கு கொடுத்த
கடவுள், விலை மதிப்பில்லா என் காதலிக்கு கொடுத்திருக்கலாம்!
கொடுத்திருந்தால் அவள் எனக்கு கிடைத்திருக்கலாம்!"
...........
நெருப்பு கங்குகளின் மத்தியில் ஜொலித்தது ஒரு ஒளி !
பிறந்த நாள் பரிசாக அவளுக்கு அணிவித்த வைர மோதிரம்!
மரணத்தை வென்ற மழலைக்கு அதை பரிசளித்தான்! பரிதவித்தான்!
(சுய) நினைவை இழந்தது, நினைவில்லை அவனுக்கு!
அவன் எண்ணத்தில் ஏதோ தோன்றியது,
*" வெப்பத்தை தாங்கும் சக்தியை... வைரத்திற்கு கொடுத்த
கடவுள், விலை மதிப்பில்லா என் காதலிக்கு கொடுத்திருக்கலாம்!
கொடுத்திருந்தால் அவள் எனக்கு கிடைத்திருக்கலாம்!"
...........
அவன் இதய துடிப்பு இரட்டிப்பானது,
* நிமிடத்திற்கு 144 முறை 'லப் லப்' 'டப் டப்' என எகிறியது, சட்டென்று நிசப்தமானது! அவ்விடமே, மார் அடித்து, மாரடைத்து,
மரணத்தையும், தன்னவளின் சாம்பலையும் தழுவினான்!
மரணத்தையும், தன்னவளின் சாம்பலையும் தழுவினான்!
கண் முன்னே கரியோடு, கறியாய் எரிந்து, கரைந்த அவளது உடலுக்கு,
அவன் இதயமும் செலுத்தியது மௌன அஞ்சலி...!
ஆம் அவள் பிறந்த நாளே, அவர்களது இறந்த நாளாக மாறிப்போனது!
இதயங்கள் மீண்டும் இணைந்தன... சொர்க்கத்தில்!
ஈருயிரை இழந்து, ஓருயிரை காத்த ஆத்ம திருப்தியில்!
"ஏக்கத்திற்கும், தா(க்)கத்திற்கும், தூக்கத்திற்கும், துக்கத்திற்கும் பிரியா - விடை கொடுக்குமாம் உண்மைக்காதல்...!"
அதற்கு ஓர் உதாரணம், இயற்கைக்கு சமர்ப்பணம் ஆன இக்காதலர்களின்
க(வி)தை ..!
உங்களில் ஒருவன்,
மு.சா
P.S:
* Antarctica @ Summer: -5 to -31°F (-15 to -35°C)
* At normal atmospheric pressure, the melting point of diamond is 3550 degrees Celsius (6422 F)
* Formula 1 car reaches a maximum speed of 220 miles or 354 km/hr)
* Normal heart rate in adults is 72 beats per minute. (May vary depending upon emotions & exercises)
(பி.கு. இக்க(வி)தையின் முடிவில், உங்கள் கண்களில் ஒரு துளி நீர் இருந்தால்,
அதுவே என் படைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி !)